வாராந்திர சிறப்பு பஸ் திடீர்னு குறைச்சிட்டாங்க!
திருப்பூர்; திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வார விடுமுறையில் பயணிக்கும் பொதுமக்கள் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுகிறது. கடந்த டிச., 24 ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால், 60 சிறப்பு பஸ்கள் வாரவிடுமுறை நாட்களில் இயக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடிந்து, ஜன., 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, இன்றும், நாளையும் நடப்பு வாரம் இயங்கும் சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.'அடுத்த வாரம் பொங்கல் விடுமுறைக்கு பலரும் வெளியூர் செல்வதால், நடப்பு வாரம் எதிர்பார்த்த கூட்டம் இருக்காது; கூட்டத்துக்கு வாய்ப்பு குறைவு. எனவே, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பத்து, புதிய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழியில் இருந்து தலா, 15 வீதம் மொத்தம், 40 சிறப்பு பஸ்கள் மட்டும் இன்றும், நாளையும் கூடுதலாக இயக்கப்படும்,' என, திருப்பூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.