உள்ளூர் செய்திகள்

நகை, பணம் திருட்டு

பல்லடம்; பல்லடம், ராயர்பாளையம் - அபிராமி நகரை சேர்ந்தவர் கணேஷ், 42. பனியன் நிறுவனத்தில், அயர்னிங் கான்ட்ராக்டர். மனைவி மஹாதேவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார். நேற்று முன்தினம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றனர். மதிய உணவு இடைவேளையின் போது, வீட்டுக்கு வந்த கணேஷ், வீட்டின் கதவு மற்றும் பீரோக்கள் உடைந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசாரின் விசாரணையில், பீரோவில் இருந்த, 3.75 சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் 3.70 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடு போனதுதெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை