மேலும் செய்திகள்
சிவன்மலையில் மஹா தீபம்
04-Dec-2025
காங்கயம்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா ஆண்டுதோறும், மூன்று நாட்கள் நடைபெறும். வரும் தைப்பூச தேர்த்திருவிழா பிப்., மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முதல் நிகழ்வாக தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க புனித நீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்களை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தினர். காலை, 9:00 மணியளவில் முகூர்த்தகாலை படி வழியாக கொண்டு வரப்பட்டு ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, தேரின், நான்கு பக்கங்களிலும் முகூர்த்தக்கால் நட்டு பூஜை செய்யப்பட்டது. சுவாமி சன்னதியின் மூலவரில் உள்ள வேல் கொண்டு வரப்பட்டு, பின் மீண்டும் எடுத்து செல்லப்பட்டது.
04-Dec-2025