மக்கள் பிரச்னைகள் ஒன்றுமே இல்லையாம்! 15 நிமிடத்தில் முடிந்த நகராட்சி கூட்டம்
உடுமலை: உடுமலை நகராட்சி கூட்டம், தலைவர் மத்தீன் தலைமையில் நடந்தது. இதில், உடுமலை நகராட்சி, 1918ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 1970ல், இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979ம் ஆண்டு, முதல் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு முதல், தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில்ல 2025-26ம் ஆண்டு பட்ஜெட்டில், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திய அரசுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட, 113 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு, அனைத்தும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.மேலும், முன்னாள் தலைவர் வேலுசாமி, வக்பு போர்டு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தும், புதிய பஸ் ஸ்டாண்டில், திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும், என கவுன்சிலர் ஆசாத் கொண்டு வந்த தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.காலை, 10:00 மணிக்கு அறிவித்த நகராட்சி கூட்டம், 10:45 மணிக்கு துவங்கியது. 31 கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில், மக்கள் பிரச்னைகள் குறித்து எந்த கவுன்சிலர்களும் பேசாத நிலையில், 15 நிமிடத்தில், காலை, 11:00 மணிக்கு, நகராட்சி கூட்டம் நிறைவடைந்தது.