உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழி தோண்ட அவசரம் பணி துவங்கவோ தாமதம்

குழி தோண்ட அவசரம் பணி துவங்கவோ தாமதம்

பல்லடம்: கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, அருள்புரம் -- உப்பிலிபாளையம் ரோட்டில், கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் கட்டுமான பணி நடந்து வருகிறது.பணிகள் துவங்கி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும், குழிகள் தோண்டப்பட்டு, பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருவதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அவர்கள் கூறியதாவது:மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது. இதற்காக, குழிகள் தோண்டப்பட்ட நிலையில், அதன் பின் பணிகள் நடைபெறவில்லை.கடைகளுக்கு முன்பாக குழிகள் இருப்பதால், வியாபாரம் தடைபடுவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை