சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை உண்டு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை: 2025-26ம் ஆண்டு, இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும், 31ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் வரி கட்டணங்களை நேரடியாக வேலை நாட்களில் காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகம், குமரன் வணிக வளாகம், தொட்டிபாளையம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், பாண்டியன் நகர் ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவே வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். எளிய முறையில் இணைய தளம் வழியாக செலுத்தலாம்.