தேருவருதே.. ஸ்ரீஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில், 65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, மஹா கணபதி ேஹாமத்துடன் இன்று துவங்குகிறது.வரும் 20ம் தேதி, காலை, மஹா கணபதி ேஹாமமும், மாலை 6:30 மணிக்கு சபரிமலை பிரதம தந்திரி கண்டரு மோகனரு தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, பறையெடுப்பு, நவகலச பூஜை, வலம்புரி சங்காபிேஷகம், மகாவிஷ்ணு பூஜை, பகவதி சேவை, உற்சவ பலி பூஜை, தாயம்பகைமேளம், பள்ளிவேட்டை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.வரும், 25ம் தேதி காலை, ஐயப்ப சுவாமி, ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சியும், காலை, 11:00 மணிக்கு பவானி கூடுதுறையில் ஆறாட்டு விழாவும், ஜெ.கே.கே., மஹாலில் அன்னதானமும் நடக்க உள்ளது. மாலை, 6:30 மணிக்கு, திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து, ஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளி, திருவீதியுலா சென்று அருள்பாலிக்கிறார். பஞ்ச வாத்தியம், வாணவேடிக்கை, ஒயிலாட்டம், கண்கவர் அலங்கார வேடிக்கையுடன் ஊர்வலம் நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.மண்டல பூஜையை விழாவையொட்டி, 26ம் தேதி துவங்கி, கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு வழிபாடுகளும், தை 1 ம் தேதி வரை நடக்க உள்ளது. அன்னதானம்
திருப்பூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழாவையொட்டி, கார்த்திகை முதல் தை மாதம் வரை அன்னதானம் நடத்தப்படும். அதன்படி, நாளை (17ம் தேதி) துவங்கி, 2025 ஜன., 5 ம் தேதி வரை, ஞாயிறு தோறும் அன்னதானம் நடக்க உள்ளது. குறிப்பாக, டிச., 26 மற்றும், 2025 ஜன., 1ம் தேதி ஆகிய நாட்களிலும் அன்னதானம் நடக்க உள்ளது.