உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சித்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சித்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

உடுமலை; உடுமலை சித்தி விநாயகர் கோவிலில், ரேணுகாதேவி அம்மன் திருக்கல்யாண உற்சவம் வரும் 29ம் தேதி நடக்கிறது. உடுமலை ருத்ரப்பநகரில் சித்திவிநாயகர், விசாலாட்சி உடனமர் பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவலில் அம்பாளின் திருக்கல்யாண உற்சவம் வரும் 28ம் தேதி துவங்குகிறது. அன்று மாலையில் புற்றுபூஜை, சக்தி அழைத்தல், பாலாற்று பூஜை நடக்கிறது. வரும் 29ம் தேதி மதியம், 12:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !