மேலும் செய்திகள்
மாவட்ட நுாலகத்தில் திருக்குறள் போட்டி
15-Dec-2024
உடுமலை ; உடுமலை, தளி ரோடு முதற்கிளை நுாலகத்தில் வாசகர்களுக்கான திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, உடுமலையில், தளி ரோட்டிலுள்ள முதற்கிளை நுாலகத்தில், திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது. நுாலகர் அபிராம சுந்தரி வரவேற்றார்.கருத்தரங்கில், நுாலகர் வாசகர் வட்ட உறுப்பினர்கள், வாசகர்கள் பங்கேற்றனர். உறுப்பினர்கள் ராஜா, சண்முகசுந்தரம் ஆகியோர் திருக்குறளின் மேன்மை குறித்து பேசினர். குடிமைப்பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த திருக்குறள் குறித்து பேசினர்.திருவள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வாசகர் வட்ட உறுப்பினர் விஜயகுமார் நன்றி தெரிவித்தார். நுாலகர்கள் பத்மாகுமாரி, பாத்திமா, மாலதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
15-Dec-2024