உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருநீலகண்டி அம்மன் கோவில் தேரோட்டம்

திருநீலகண்டி அம்மன் கோவில் தேரோட்டம்

பொங்கலுார் : பொங்கலுாரில் பிரசித்தி பெற்ற திருநீலகண்டி அம்மன் கோவில் உள்ளது. கோவிலிலுள்ள அம்மனை பொன்ன குலத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.அமாவாசை, பவுர்ணமி உட்பட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.அம்மன் கோவிலில் சிறிய தேர் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி