உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் சைவ சித்தாந்த வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் ஏற்பாடு

திருப்பூரில் சைவ சித்தாந்த வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் ஏற்பாடு

திருப்பூர்; திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், திருப்பூரில் சைவ சித்தாந்த வகுப்புகள், மாதம்தோறும், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.திருப்பூர், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் உள்ள திருவருள் அரங்கில், நாளை முதல் பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன. சைவ சித்தாந்தம் என்பது, தட்சிணாமூர்த்தி வடிவில், இறைவன் கூறியதாக ஐதீகம்.இதுகுறித்து சைவ சித்தாந்த பயிற்சியாளர்கள் கூறியதாவது:சிவாகமம் என்னும் சைவ சிந்தாந்தம், இறைவன், உயிர்கள், உயிர்களுக்குள்ளான பாசன பொருட்கள் குறித்து தெளிவாக கூறுகிறது. சிவபெருமான், தட்சிணாமூர்த்தியாக தோன்றி முனிவர்களுக்கு உபதேசம் செய்தது. திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், பக்தர்களுக்கும் உபதேசம் கிட்டும் பாக்கியம் கிடைத்துள்ளது. இவ்வகுப்பில் பயிலும் பக்தர்களும், பெருமானின் சீடர்களாகவும், அவன் திருவடியில் அமரும் பாக்கியம் பெற்றவர்களாகவும் இருப்போம்.ஒவ்வொரு மாதமும், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 வரை, சைவ சித்தாந்த வகுப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு, 98659 24485 என்ற எண்களில் அணுகலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை