உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்

வரும், 13ம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா. தீபத்திருநாளில் வீடு, நிறுவனங்களில் அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி, வண்ணக் கோலமிட்டு, அவற்றை வைத்து வழிபடுவதை சிறப்பாக கருதுகின்றனர். கோவில்களில் திருவிளக்குகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.தீபத்திருநாள் நெருங்கியுள்ளது. அகல் விளக்குகள் விற்பனை, திருப்பூர், தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் ஸ்டாப், பிச்சம்பாளையம் பிரிவு, போயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் துவங்கியுள்ளது. மண்ணால் வேயப்பட்ட வண்ண, அலங்கார விளக்குகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.அகல் விளக்கு விற்பனையாளர்கள் கூறுகையில், ''விருத்தாச்சலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மண் விளக்குகள் விற்பனைக்கு வருகிறது. பார்வையாளரைக் கவரும் வகையிலான பேன்ஸி, புதிய ரக டிசைன் விளக்குகள் கோல்கத்தா, மும்பை பகுதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது.இன்றும், வரும் நாட்களில் தான் நடப்பாண்டுக்கான விற்பனை களைகட்ட வாய்ப்புள்ளது. ஒரு நாள் முன்பு வரை விளக்குகளை வாங்காமல் கடைசி நேரத்தில் வந்து வாங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். அதிகமாக இருப்பு வைப்பதில்லை. குறைந்த நாட்கள் மட்டுமே விற்பனை என்பதால், தேவைக்கு ஏற்ப மட்டுமே வாங்கி விற்கிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை