உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளஸ் 2 தேர்வெழுதியவர்கள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வெழுதியவர்கள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்

உடுமலை,; பிளஸ் 2 தேர்வு முடிவு மே, 8ம் தேதி வெளியானது. இத்தேர்வெழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் விடைத்தாள் நகல் விண்ணப்பித்து பெற வேண்டும்.பலர் நகல் கோரி விண்ணப்பித்த நிலையில், கடந்த 4ம் தேதி விடைத்தாள் நகல் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.மறுமதிப்பீடு, மற்றும் மறுகூட்டல் விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இன்று (7ம் தேதி) திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மறுமதிப்பீடு பாடத்துக்கு 505 ரூபாய், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு, 305, இதர பாடங்களுக்கு, 205 ரூபாய் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் போது தரப்படும் ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும் என மாவட்ட தேர்வுகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை