உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சன்மார்க்க சங்கத்தில் முப்பெரும் விழா

சன்மார்க்க சங்கத்தில் முப்பெரும் விழா

திருப்பூர், ; திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் முப்பெரும் விழா நடந்தது. வள்ளலார் 202வது அவதார நாள் விழா, சங்கத்தின் 87வது ஆண்டு விழா, மாணவர்கள் கலைத்திறன் வெளிப்படுத்தும் விழா ஆகிய முப்பெரும் நேற்று ஆலங்காடு மையத்தில் நடந்தது.கவுரவ தலைவர் ராமசாமி சன்மார்க்க சங்க கொடியேற்றி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். அகவல் வழிபாடு நடைபெற்றது. நீறணி பவளக்குன்றன் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. பிரித்வி நிறுவன தலைவர் பாலன் முன்னிலை வகித்தார். பல்வேறு பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.செயலாளர் ஜீவானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். வடலுார் கருணை இல்ல நிர்வாகிகள் சுப்ரமணியம், நாராயணசாமி புருேஷாத்தமன் ஆகியோர் பேசினர். ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார். மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஜோதி வழிபாட்டில் திரளானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ