உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., - எம்.பி., புகார் திருப்பூர் கலெக்டர் மறுப்பு

தி.மு.க., - எம்.பி., புகார் திருப்பூர் கலெக்டர் மறுப்பு

திருப்பூர்: எஸ்.ஐ.ஆர்., திருத்த பணி தொடர்பான, தி.மு.க., - எம்.பி., இளங்கோ குற்றச்சாட்டுக்கு, திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளருக்கான படிவங்களை வழங்கி வருகின்றனர். அவற்றை பூர்த்தி செய்த பின், மீண்டும் வீடுகளுக்கு சென்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவ., 5ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க., - எம்.பி., என்.ஆர்.இளங்கோ, ''திருப்பூர் மாவட்டத்தில் சில தொகுதிகளில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கணக்கீட்டு படிவத்தை கொடுத்து, அடுத்த நாளே பூர்த்தி செய்து கொடுக்குமாறு வாக்காளரிடம் தெரிவித்துஉள்ளனர்,'' என, குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே அளித்துள்ள மறுப்பு அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில், 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளருக்கு வழங்கும் படிவங்களை, பூர்த்தி செய்து மறுநாளே ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திரும்ப பெற வேண்டும் என, எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை