உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனத்துக்குள் திருப்பூர் குழு கரம்கோர்ப்பு : வருமானவரித்துறையினர் துாய்மைப்பணி 

வனத்துக்குள் திருப்பூர் குழு கரம்கோர்ப்பு : வருமானவரித்துறையினர் துாய்மைப்பணி 

திருப்பூர்: 'துாய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, 'துாய்மையே சேவை'(ஸ்வச்சதா ஹி சேவா) என்ற துாய்மை பணியுடன் கூடிய பிரசார இயக்கம் நேற்று திருப்பூர், சின்னாண்டிபாளையம், கிளாசிக் அவென்யூ பூங்காவில் நடந்தது. திருப்பூர் சரக வருமானவரித்துறை, ஆடிட்டர்கள் கூட்டமைப்பு, 'வெற்றி' அறக்கட்டளையின் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் ஆகியன சார்பில், துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. வருமானவரித்துறை இணை இயக்குனர் இளங்கிள்ளி, துணை கமிஷனர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். ஆடிட்டர்கள் கூட்டமைப்பை சேர்ந்த செந்தில்குமார், கல்யாணராமன், வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழு வினருடன் இணைந்து, பூங்காவை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின், 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம், வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குனர் குமார் துரைசாமி ஆகியோர், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மற்றும் 2001 முதல் நடைபெற்று வரும் வெற்றி அறக்கட்டளை சேவை பணிகளை விளக்கி பேசினர். வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் இளம் பசுமை அமைப்பினர் என, 500க்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஆர்வமாக பணியாற்றி வருவது குறித்தும், இந்தாண்டுடன் சேர்த்து, 11 திட்டங்கள் வாயிலாக, 25 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் குறித்தும் விவரித்தனர். இணை கமிஷனர், துணை கமிஷனர் உள்ளிட்டோர் பேசுகையில், 'இயற்கையை பாதுகாக்கும் அறப்பணியில், வெற்றி அமைப்பும், நுாற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் சுறுசுறுப்பாக இயங்கி வருவது பாராட்டுக்குரியது. வருமானவரித்துறை, பசுமைப்பணிக்கு என்றென்றும் துணை நிற்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி