உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்டிலேயே திருப்பூரில் தான் காற்றுமாசு குறைவு: கிரியா ஆய்வு மைய அறிக்கையில் தகவல்

நாட்டிலேயே திருப்பூரில் தான் காற்றுமாசு குறைவு: கிரியா ஆய்வு மைய அறிக்கையில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: இந்தியாவில், 33 மாநிலங்களுக்கு உட்பட்ட, 749 மாவட்டங்களில் நடந்த காற்றுமாசு ஆய்வில், திருப்பூர் மாவட்டத்தில் தான், குறைந்தபட்ச அளவாக (ஒரு கனமீட்டருக்கு, 21 மைக்ரோ கிராம்) மாசு பதிவாகியுள்ளது. 'கிரியா' எனப்படும், துாய்மையான காற்று மற்றும் ஆற்றுதலுக்கான ஆய்வு மையம், உலக சுகாதார மையம் நிர்ணயித்த காற்றின் தரக்குறியீட்டு அளவு குறித்து, இந்தியா முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலக சுகாதார மையம், ஓராண்டுக்கு, ஒரு கனமீட்டரில் (கியூபிக் மீட்டர்) ஐந்து 'மைக்ரோ கிராம்'க்கு மிகாமல் காற்றுமாசு இருக்கலாம் என, நிர்ணயித்துள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் காற்று மாசு அதிகமாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நம் நாடு முழுவதும், 33 மாநிலங்களுக்கு உட்பட்ட, 749 மாவட்டங்களிலும் விரிவான காற்று மாசு ஆய்வுகள் நடத்தப்பட்டது. அவற்றில், 447 மாவட்டங்களில், காற்று மாசு அளவு, ஒரு கனமீட்டருக்கு 40 மைக்ரோ கிராம் என்ற அளவு பதிவாகியுள்ளது. இந்தியாவிலேயே, தலைநகர் டில்லியில் தான் காற்று மாசு அதிகம். ஒரு ஆண்டு மாசு '101' மைக்ரோ கிராம் அளவுக்கு பதிவாகியுள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக, சண்டிகர், திரிபுரா, ஹரியானா, பீஹார், மேற்கு வங்கம், பஞ்சாப், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் காற்று மாசு அதிகம் உள்ளது. நம் நாட்டில் உள்ள, 33 மாநிலங்களுக்கு உட்பட்ட 749 மாவட்டங்களில் நடந்த ஆய்வுகளில், நாட்டிலேயே குறைந்தபட்ச காற்றுமாசு உள்ள மாவட்டம், திருப்பூர் மாவட்டம் என தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், ஓராண்டு காற்றுமாசு, கனமீட்டருக்கு, 21 மைக்ரோ கிராம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றுமாசு குறைவான மாநிலம் புதுச்சேரி (25 மைக்ரோ கிராம்) மற்றும் தமிழகம் (26 மைக்ரோகிராம்) என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக நடந்த ஆய்வுகளில், திருப்பூர் மாவட்டத்தில் தான், குறைந்தபட்ச காற்றுமாசு பதிவாகியுள்ளது, 'கிரியா' ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நாடு முழுவதும் காற்றுமாசு ஆய்வு நடந்துள்ளதாக தகவல் கிடைத்தது. இந்தியாவில் உள்ள, 749 மாவட்டங்களில், திருப்பூரில் காற்றுமாசு மிக குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் வாயிலாக, கடந்த, 11 ஆண்டுகளில், 25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. இதுதவிர, பல்வேறு அமைப்புகள் மூலமாக மரம் அதிகம் வளர்ப்பதே, காற்றுமாசு குறைவுக்கு காரணமாக இருக்கலாம் என, பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை