உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆயத்த ஆடை உற்பத்தி மையங்களில் தனித்துவத்துடன் செயல்படும் திருப்பூர் ஹைதராபாத் மாநாட்டில் புகழாரம்

ஆயத்த ஆடை உற்பத்தி மையங்களில் தனித்துவத்துடன் செயல்படும் திருப்பூர் ஹைதராபாத் மாநாட்டில் புகழாரம்

திருப்பூர்; உலக அளவில், தனித்துவத்துடன் செயல்படும் திருப்பூரை முன்மாதிரியாக கொண்டு, பசுமை உற்பத்திக்கு மாறவேண்டுமென, ைஹதராபாத்தில் நடந்த 'கிரீன் கோ -2025' மாநாட்டில் தொழில்நுட்ப வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர். எதிர்காலத்தை பசுமை தொழில்நுட்பமாக மாற்றும் வகையில், வளர்ந்த நாடுகளில், 'கோ கிரீன்' என்ற மாநாடு நடத்தி, முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதேபோல், இந்திய தொழிற்கூட்டமைப்பு மூலமாக, பசுமை உற்பத்தியை ஊக்குவிக்கும் தேசிய அமைப்பும் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், மாநிலம் வாரியாக 'கிரீன் கோ' என்ற தலைப்பில் மாநாடு நடத்தி, தொழில்நுட்ப வல்லுனர், தொழில்துறையினருடன் கலந்துரையாடி, புதிய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு சென்னையில் நடந்தது போல், இந்தாண்டு, 'கிரீன் கோ -2025' மாநாடு, ைஹதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. நீடித்த நிலைத்தன்மை (சஸ்டெய்னபிலிட்டி), பசுமை தொழில்நுட்பம், வர்த்தக நடைமுறை, கழிவுநீர் மேலாண்மை, புதிய தொழில்நுட்பம் என, பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடந்தது. 'சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய ஜவுளி உற்பத்தி' என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், திருப்பூர் பின்னலாடை தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஆனந்த், திருப்பூர் சாய ஆலைகள் சார்பில் சுரேஷ், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக ஆலோசகர் சபரிகிரீஷ் மற்றும் இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்க பொதுசெயலாளர் நவீன் சய்நனி ஆகியோர் பேசினர். ஜவுளி உற்பத்தித்துறையை, பசுமை சார் உற்பத்தியாக மாற்றுவது குறித்து விரிவான ஆலோசனை நடந்தது. முன்னதாக, திருப்பூரின் பசுமை சாதனைகள், வெற்றிக்கதையாக 'பவர்பாயின்ட்' வாயிலாக விளக்கப்பட்டது.

முன்மாதிரியாக விளங்கும் திருப்பூர்

திருப்பூரின் மொத்த தேவையை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக நடக்கும், மரபுசாரா எரிசக்தி உற்பத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 22 லட்சம் மரக்கன்றுகள் வளர்த்து வருவது, மறுசுழற்சி ஜவுளி உற்பத்தி குறித்து, பல்வேறு மாநில பிரதிநிதிகள் வியந்து, பாராட்டினர். சி.ஐ.ஐ., தேசிய நிர்வாகிகள், இந்தியா மட்டுமல்ல, உலக அளவிலான ஆயத்த ஆடை 'கிளஸ்டரில்', திருப்பூர் தனித்துவத்துடன் செயல்படுவதாக பாராட்டினர். திருப்பூரை முன்மாதிரியாக கொண்டு, அனைத்து கிளஸ்டர்களிலும் பசுமை உற்பத்தி தொழில்நுட்பத்தையும், தொழிலாளர் பாதுகாப்பு பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்றும், மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.- சபரிகிரீஷ்பின்னலாடை ஏற்றுமதி ஆலோசகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி