உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் ரவுண்ட் டேபிள் 16ம் ஆண்டு ரத்த தான முகாம்

திருப்பூர் ரவுண்ட் டேபிள் 16ம் ஆண்டு ரத்த தான முகாம்

திருப்பூர்: திருப்பூர், முதலிபாளையம் பிராச்சி எக்ஸ்போர்ட் வளாகத்தில் நேற்று நடந்த, ரத்ததான முகாமில், 1,300 யூனிட் ரத்தம், தானமாக வழங்கப்பட்டது. கடந்த, 16 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு முகாம் துவக்க விழாவில், 'திருப்பூர் ரவுண்ட் டேபிள் (எண்: 116) தலைவர் தினேஷ் ஜெய்ன், திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் தலைவர் நேகா ஜெய்ன், பிராச்சி எக்ஸ்போர்ட் இணை நிர்வாக இயக்குனர் ஹர்திக் செட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில், சமூக ஆர்வலர்கள், தொழிலாளர்கள், விஷ்ணுபிரபு, வருண் சுப்பிரமணியன் ஆகியோரும் நேற்று ரத்ததானம் செய்தனர். உயிர்காக்கும் சேவையில், ரத்ததானம் செய்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ