திருப்பூர் விஷன் ரோட்டரி நிர்வாகிகள் பொறுப்பேற்பு
திருப்பூர்; திருப்பூர் விஷன் ரோட்டரியில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.திருப்பூர் விஷன் ரோட்டரியின் 2025-26ம் ஆண்டுக்கான நிர்வாக குழுவினர் பதவியேற்பு விழா, திருப்பூர் தாராபுரம் ரோடு எம்.புதுப்பாளையத்தில் உள்ள விஷன் ரோட்டரி ஹாலில் நேற்று இரவு நடந்தது. தலைவர் - குமார் என்ற நாச்சிமுத்து, செயலாளர் - சிவபிரகாஷ், பொருளாளர் - சண்முகம், உடனடி முன்னாள் தலைவர் - பரமசிவம், துணை தலைவர் - தாமோதரன், இணை செயலாளர் - சண்முகசுந்தரம், சார்ஜன்ட் அட் ஆர்ம்ஸ் - பெரியசாமி, நிர்வாக செயலாளர் - சரவணன், சேர்மன் சங்க மெம்பர்ஷிப் - சக்திவேல், சேர்மன் ரோட்டரி பவுண்டேசன் - சக்திவேல்.சேர்மன் பப்ளிக் இமேஜ் - மூர்த்தி, சேர்மன் சர்வீஸ் திட்டங்கள் - பாலசுப்ரமணியன், சங்க நிர்வாகம் - பொன்னுசாமி, வொக்கேஷனல் சர்வீஸ் - ஜெயக்குமார், கம்யூனிட்டி சர்வீஸ் - ராமசாமி, இன்டர்நேஷனல் சர்வீஸ் - மனோஜ், சேர்மன் இளைஞர் சேவை - கதிரவன், இன்ட்ராக்ட் ரோட்ராக்ட் - சக்திவேல், சங்க பயிற்றுநர் -கோபால்ராஜ், சங்க ஆலோசகர் - தர்மராஜ், ஜெகநாதன், சின்னசாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் மைக்கேல், செயலாளர் பிரசன்னா வெங்கட், உதவி ஆளுநர் ஆறுமுகம் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக பொறுப்பேற்று கொண்டனர். பொறுப்பேற்று கொண்ட நிர்வாகிகள் வரும் ஆண்டில் விஷன் ரோட்டரி மூலமாக என்னனென்ன மக்கள் பணிகளை செய்வது உள்ளிட்டவை குறித்து திட்டமிட்டனர்.