உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனத்துக்குள் திருப்பூர் திட்டம்; பசுமை வளர்க்கும் பணி தீவிரம்

வனத்துக்குள் திருப்பூர் திட்டம்; பசுமை வளர்க்கும் பணி தீவிரம்

உடுமலை, ; உடுமலை பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு, 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடந்து வருகிறது.தற்போது, வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணியும் தீவிரமடைந்துள்ளது. உடுமலை பகுதியில், நடப்பாண்டு இத்திட்டத்தின் கீழ், மார்ச் முதல், 8 மாதத்தில் 1.17 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.மடத்துக்குளம் தாலுகா, மெட்ராத்தியை சேர்ந்த திருமலைசாமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில், வேம்பு, புங்கன், மகாகனி, சொர்க்கம், இலுப்பை, பூவரசன் என மண்ணின் மரபு சார்ந்த, 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.அதே போல், மேல்கரைப்பட்டியைச்சேர்ந்த விவசாயி பாலமுருகன் தோட்டத்தில், மகிழம், துாங்குவாகை, சொர்க்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான, 375 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாய நிலங்கள், கோவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள், தொழில் நிறுவன வளாகங்களில், மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை