திருவண்ணாமலை தீபம் 75 சிறப்பு பஸ் இயக்கம்
திருப்பூர்; கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு, 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வரும், 13 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அவ்வகையில், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும், 12 முதல், 14ம் தேதி வரை என, மூன்று நாட்கள், 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.