மேலும் செய்திகள்
இன்று இனிதாக... திருப்பூர்
14-May-2025
n ஆன்மிகம் nதேர்த்திருவிழாஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிஷேகம் - காலை, 10:00 மணி, சுவாமி புறப்பாடு, பூத வாகனம், அன்னதானம் - மாலை, 6:30 மணி. வீனை கச்சேரி இசை நிகழ்ச்சி மற்றும் திவ்ய நாம ஸங்கீர்த்தன இசை - மாலை, 6:00 மணி.கும்பாபிஷேக விழாவிநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மங்கள இசை, விநாயகர் வழிபாடு, இரண்டாம்கால யாக பூஜை, ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை, 9:00 மணி, மூன்றாம் கால யாக பூஜை - மாலை, 6:00 மணி.l சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கபாளையம், குமார் நகர், திருப்பூர். புனித நீர் எடுத்தல், யாக சாலை அலங்காரம் - காலை, 10:00 மணி, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, முதல் கால யாக பூஜை - மாலை, 6:00 மணி.l ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை, 9:15 மணி, மூன்றாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் - மாலை, 6:00 மணி.l ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மஹா மாரியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், மயில்ரங்கம், வெள்ளகோவில். மங்கள இசை, தீப வழிபாடு - காலை, 7:00 முதல், 9:30 மணி வரை. தீர்த்தம் மற்றும் முளைப்பாரி கோவில் வலம் வந்து யாக சாலையில் சேருதல் - காலை, 10:00 மணி. மங்கள இசை, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கிராம சாந்தி - மாலை, 5:00 மணி.மண்டல பூஜைஸ்ரீ காசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிஷேக பூஜை - மதியம், 12:00 மணி.l காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை, 10:00 மணி.பகவத் கீதைதொடர் சொற்பொழிவுபழநியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.n பொது nமனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி, மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.l அறிவுத்திருகோவில், அக்ரஹாரப்புதுார், மங்கலம். காலை, 5:30 முதல், 7:30 மணி வரை மற்றும் 10:30 முதல், 12:30 மணி வரை.கடல் கன்னி கண்காட்சிமரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை, 5:00 முதல் இரவு, 9:30 மணி வரை.
14-May-2025