n ஆன்மிகம் n ஸ்ரீ சத்யசாயி பாபா நுாற்றாண்டு விழா ஸ்ரீ சத்யசாயி பாபா, 100 வது பிறந்த நாள் விழா, ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, ராம்நகர், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் - அதிகாலை 5:00 மணி. ருத்ர பாராயணம் - மாலை 5:00 மணி. சிறப்பு பஜன், சிறப்பு சொற்பொழிவு, மங்கள ஆரத்தி - மாலை 6:00 மணி. மண்டல பூஜை 66ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 7:00 மணி. சிறப்பு பூஜை கார்த்திகை மாத முதல் செவ்வாய்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை, உத்தம லிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். ஏற்பாடு: சண்முகார்ச்சனைக்குழு. முருகப் பெருமானுக்கு சண்முகார்ச்சனை, அபிேஷக, ஆராதனை, துர்க்கையம்மனுக்கு அபிேஷம், அலங்காரம் - காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. தொடர் சொற்பொழிவு மாணிக்கவாசகரின் 'வாதவூரடிகள் புராணம்' தொடர் சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். சொற்பொழிவாளர்: சிவசண்முகம். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. n பொது n கூட்டுறவு வார விழா சுப்பராய கவுண்டர் திருமண மண்டபம், கொடுவாய். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன், கயல்விழி. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கும் நிகழ்வு - காலை 10:30 மணி. ஆர்ப்பாட்டம் சமூகநீதி மற்றும் சமத்துவ நாளாக கடைபிடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், நால்ரோடு சந்திப்பு, பெருமாநல்லுார். ஏற்பாடு: இ.கம்யூ., கட்சி. காலை 10:00 மணி. n கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ. காலை 11:00 மணி. யோகா தியான பயிற்சி ஸ்ரீ ராம்சந்திர மிஷன், ஹார்ட்புல்னெஸ் தியான மையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர். எளிமையான யோகா, தியான பயிற்சி - காலை 6:00 முதல் 7:30 மணி. இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.