மேலும் செய்திகள்
சந்தைக்கு வரத்து குறைவு; உயர்கிறது தக்காளி விலை
30-Jan-2025
உடுமலை; உடுமலையில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், விலையும் உயராததால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், காய்கறி சாகுபடியில் பிரதானமாக தக்காளி சாகுபடி உள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தக்காளி சாகுபடி குறைந்துள்ளதோடு, மகசூல் பெருமளவு குறைந்துள்ளது.வழக்கமாக உடுமலை நகராட்சி சந்தைக்கு, சராசரியாக, 30 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும் நிலையில், தற்போது, 5 ஆயிரம் முதல், 7 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே வரத்து காணப்படுகிறது.வரத்து குறைந்ததால், பிற மாவட்ட வியாபாரிகள் வருகை இல்லாததால், விலையும் குறைந்துள்ளது.கடந்த வாரம், 14 கிலோ கொண்ட பெட்டி, ரூ. 100 வரை மட்டுமே விற்று வந்த நிலையில், தற்போது விலை உயர்ந்து, நேற்று, ஒரு பெட்டி, ரூ. 200 வரை மட்டுமே ஏலம் போனது.விவசாயிகள் கூறியதாவது : வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தக்காளி மகசூல் குறைந்துள்ளது. ஏக்கருக்கு, உழவு, மருந்து, உரம் என, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், தற்போது விலை சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தற்போதைய சூழலில், ஒரு பெட்டி, குறைந்த பட்சம், ரூ. 400 வரை ஏலம் போனால் மட்டுமே கட்டுபடியாகும். வரத்து குறைந்து, வரும் வாரங்களில் விலை உயரும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.
30-Jan-2025