உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சரிய துவங்கியது தக்காளி விலை

 சரிய துவங்கியது தக்காளி விலை

திருப்பூர்: வரத்து குறைவால் கடந்த வாரம் கிலோ, 50 ரூபாய்க்கு தக்காளி விற்றது. வரத்தில் சற்று இயல்பு திரும்பியுள்ளதால், கிலோ, 32 ரூபாய்க்கு நடப்பு வாரம் விற்பனையாகிறது. அவரை, பீர்க்கன் கிலோ, 70 ரூபாய் என்ற நிலை தொடர்கிறது. மழை காரணமாக மலைக்காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பில் வைக்க முடியாமல், சாகுபடி செய்து அனுப்பி வைப்பதால், கேரட், பீன்ஸ், பீட்ரூட் விலை கிலோவுக்கு, பத்து ரூபாய் குறைந்துள்ளது. இருப்பு வைப்பதால், சின்ன வெங்காயம் விலை மாற்றமின்றி கிலோ, 50 ரூபாயில் தொடர்கிறது. திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் காய்கறிகள் (கிலோ) விலை நிலவரம்: கத்தரிக்காய் - 40 - 60; வெண்டை --- 50; மிளகாய் - 50; புடலங்காய் - 40; அவரைக்காய் - 70; கொத்தவரை - 40; பீர்க்கன் - 70; சுரைக்காய் - 15; பாகற்காய் - 60; முள்ளங்கி - 30; வாழைக்காய் - 25; சேனைக்கிழங்கு - 40; மரவள்ளி - 25; எலுமிச்சை - 80; சின்ன வெங்காயம் - 50; பெரிய வெங்காயம் - 25; உருளை - 50; முட்டைக்கோஸ் - 30, கேரட் - 60; பீட்ருட் - 50; பீன்ஸ் - 50; காலிபிளவர் - 40; மேராக்காய் - 20; இஞ்சி - 70; மல்லித்தழை - 50; கறிவேப்பிலை - 50; புதினா - 20 ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ