மேலும் செய்திகள்
விலை குறைவால் தோட்டத்தில் கருகும் தக்காளி
24-Apr-2025
பொங்கலுார், ; கார்த்திகைப் பட்டத்தில் நடவு செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கடுமையான வெப்பம் நிலவும் சித்திரை, வைகாசி மாதங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்படும்.எனவே, விலை உச்சத்தை தொடும். கடந்த ஆண்டும் நல்ல விலை கிடைத்தது. இதை எதிர்பார்த்து ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர்.வரத்து குறையாததால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. தற்போது தக்காளி விற்கும் பணம் பறிப்பு கூலி, வேன் வாடகை போன்றவற்றுக்கே சரியாக போய்விடுகிறது. நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தக்காளி சாகுபடி செய்த பல விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.இந்நிலையில், முன்கூட்டியே பெய்ய வேண்டிய கோடை மழை போதிய அளவு பெய்யவில்லை. தற்போது தான் பெய்யத் துவங்கியுள்ளது. மழை தீவிரமடைந்தால் தக்காளி பழங்கள் பெருமளவில் அழுகிவிடும்.இதனால் வரத்து குறைந்து விலை உயர்வு ஏற்படும். பாதி பழங்கள் அழுகினாலும் செலவு மீதமாகும், நல்ல விலை கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
24-Apr-2025