உள்ளூர் செய்திகள்

 தக்காளி

தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் தெற்கு உழவர் சந்தைக்கு, கடந்த வாரம் வரத்து குறைவாக இருந்ததால், ஒரு கிலோ, 30 - 35 ரூபாய் வரையும், மூன்று கிலோ, 100 ரூபாய்க்கும் தக்காளி விற்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக வெளிமாநில தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. வழக்கமாக, 90 - 110 டன் தக்காளி வரும் நிலையில், தற்போது கூடுதலாக ஐந்து டன் வருகிறது. வெளி மார்க்கெட்டில் தக்காளி கிலோ, 20 - 25 ரூபாய்க்கு விற்பதால், உழவர் சந்தையில் தக்காளி விற்பனை சற்று குறைந்துள்ளது. நேற்று தெற்கு உழவர் சந்தையில் தக்காளி கிலோ, 15 - 20 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது. 14 கிலோ எடை கொண்ட சிறிய கூடை தரத்துக்கு ஏற்ப, 200 - 250 ரூபாய்க்கும், 26 கிலோ எடை கொண்ட பெரிய கூடை, 400 - 500 ரூபாய்க்கும் விற்றது. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை