உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை கு.க., சிகிச்சை முகாம்

நாளை கு.க., சிகிச்சை முகாம்

திருப்பூர்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குடும்ப நலத்துறை சார்பில், ஆண்களுக்கான நவீன தழும்பில்லா குடும்ப நல கருத்தடை (வாசக்டமி) சிகிச்சை முகாம் வரும், 24ம் தேதி, பல்லடம் அரசு மருத்துவமனையில் நடக்கிறது.பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைகளை காட்டிலும், எளிதான ஆண்களுக்கான நவீன கருத்தடை முறையை ஏற்று, மனைவியின் சுமையை குறைக்கலாம். வாசக்டமி சிகிச்சை முறையை ஏற்கும் தகுதி வாய்ந்த ஆண்களை வரவேற்கப்படுகிறார்கள்.அரசின் ஊக்கத்தொகையாக, 3,100 ரூபாய் வழங்கப்படும். விபரங்களுக்கு 8072865541 என்ற எண்ணில் அழைக்கலாம், என மக்கள் நல்வாழ்வுத்துறை குடும்ப நலத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை