உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்திமலையில் சுற்றுலா தின விழா

திருமூர்த்திமலையில் சுற்றுலா தின விழா

உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இங்குள்ள, ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரியில், சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், சுற்றுலா ஆர்வலர்கள், சுற்றுலா தொழில் முனைவோர்கள் இணைந்து, தூய்மை பணி மேற்கொண்டனர். மேலும் சுற்றுலாப் பயணியரை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சுற்றுலா சங்கங்களின் நிர்வாகிகள் நாகராஜ், பூபதி, மூர்த்தி, பிரசாந்த், நவீன், சந்தோஷ்,நெல்சன், ஜவகர் மற்றும் அரசு கல்லூரி பேராசிரியர் விஜய் ஆனந்த், சுற்றுலா ஆர்வலர்கள் சுற்றுலா தொழில் முனைவோர்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ