தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்
பல்லடம்: பல்லடம் போக்குவரத்து கழக பணிமனை முன்பாக, பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாராபுரம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் கணேசனை, மதுரை பஸ் ஸ்டாண்ட் உதவி மேலாளர் மாரிமுத்து, காலணியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து, பல்லடம் போக்குவரத்து கழகத்தின் முன்பாக, தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதில், உதவி மேலாளர் மாரிமுத்துவை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவருடன் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வீடியோ ஆதாரத்தை பயன்படுத்தி, உதவி மேலாளரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - நேதாஜி மற்றும் தே.மு.தி.க., உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.