மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு கடை அகற்றம்
19-Sep-2025
திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் தாராபுரம் ரோட்டில் உள்ள தள்ளுவண்டிக்கடைகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தாராபுரம் ரோட்டின் மேலேயே கடைகள் இருப்பதால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு சிரமப்படுகின்றனர். நடப்பதற்கு அமைக்கப்பட்ட நடைபாதை முழுவதும் எச்சில் உமிழ்ந்து நடக்க அருவெறுப்பான இடமாக இருக்கிறது. தள்ளுவண்டிக்கடைகளால் நடைபாதை மேலும் மறைக்கப்பட்டு, மக்களும் ரோட்டில் நடந்து செல்கின்றனர். இதனால், மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
19-Sep-2025