உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்., கட்சியினர் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

காங்., கட்சியினர் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்; பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்தும், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநில தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகவும் கூறி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நேற்று இப்பிரச்னையை வலியுறுத்தி டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி, காங்., எம்.பி., ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் திரண்டு ஊர்வலமாகச் சென்றனர். போலீசார் அவர்களைக் கைது செய்தனர். ராகுல், பிரியங்கா கைதை கண்டித்து திருப்பூரில் நேற்று மாலை இளைஞர் காங்., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. அதன் மாநில தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில், அக்கட்சியினர் குமரன் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடக்கு போலீசார் மறியலில் ஈடுபட்ட, 40 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !