உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

உடுமலை; மடத்துக்குளம் பஸ்ஸ்டாண்டுக்குள் புறநகர் பஸ்கள் செல்லாததால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் உள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாண்டுக்குள் டவுன்பஸ்கள் தவிர புறநகர் பஸ்கள் செல்வதில்லை. அவை தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணியரை ஏற்றி, இறக்கி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புறநகர் பஸ்கள், பஸ்ஸ்டாண்டுக்குள் சென்று வர போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி