போக்குவரத்து நெரிசல்
உடுமலை: கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில், டவுன்பஸ்களை தவிர, புறநகர் பஸ்கள் உள்ளே செல்வதில்லை. மேலும் இந்த பஸ்கள் முன்புறம் நெடுஞ்சாலையில் நின்று பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துக்கழகத்தினர், பஸ் உள்ளே செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.