ரயில் இயக்கம் நீட்டிப்பு
திருப்பூர்; கோவையில் இருந்து தாம்பரத்துக்கு ஞாயிறுதோறும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06185) இயக்கப்படுகிறது.போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக பயணிக்கும் இந்த ரயில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஸ்டேஷன்களில் நின்று செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்று சேர்கிறது. ரயில் இயக்கம், மார்ச், 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.வரும், 9, 16, 23 மற்றும் மார்ச், 2 ல் இந்த ரயில் இயங்கும். ஞாயிறுதோறும் கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06036) இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் இயக்கமும், வரும் ஜூன், 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.