கிராமப் பெண்கள் விழிப்புணர்வு; மகளிர் குழுவினருக்கு பயிற்சி
திருப்பூர்; சமையல் சிலிண்டர் காஸ் பயன்பாடு, தீத்தடுப்பு நடவடிக்கை, உணவு பாதுகாப்பு, வங்கிக்கடன், சைபர் கிரைம் குற்றத்தடுப்பு, மகளிர் திட்டம் மற்றும் நிதியுதவி குறித்து, கிராமப்புற பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று துவங்கி, இப்பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்று, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி வட்டார அளவில் பயிற்சி வழங்கப்பட்டது.இன்று (19ம் தேதி) காலை, 10:00 மணி முதல், திருப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட, கருக்கன்காட்டுப்புதுார் சமுதாய கூடத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. நாளை, (20ம் தேதி) காலை, பல்லடம்; மதியம், பொங்கலுார் பி.டி.ஓ., அலுவலகம், 21ம் தேதி காலை, தாராபுரம்; மதியம், குண்டடம் பி.டி.ஓ., அலுவலகம், 25ம் தேதி காலை, மூலனுார்; மதியம், வெள்ளகோவில் பி.டி.ஓ., அலுவலகம், 26ம் தேதி, காலை காங்கயம் பி.டி.ஓ., அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடக்கிறது.வரும், 27ம் தேதி காலை, உடுமலை போடிபட்டி; மதியம், பெதப்பம்பட்டி பி.டி.ஓ., அலுவலகம், 28ம் தேதி ஜோத்தம்பட்டி கிராமத்தில் பயிற்சி முகாம் நடக்கிறது.இதில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன், நுகர்வோர் பயிற்சியாளர்களாக நல்லுார் நுகர்வோர் மன்றத்தின் வேல்முருகன், பூண்டி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் நிர்வாகி அன்பழகன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.