மரம் காக்க பேரணி
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சில்ட்ரன் இஸ்லாமிக் ஆர்கனைசேஷன் சார்பில், 'மண்ணில் கைகள், இந்தியாவில் இதயங்கள்' என்ற தலைப்பில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மரங்களைக் காக்க வலியுறுத்தி, ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதன் திருப்பூர் மாநகர கிளை சார்பில் நேற்று இந்த விழிப்புணர்வு ஊர்வலம் வெங்கடேசா காலனி, பள்ளி வாசல் முன் துவங்கியது. கவுன்சிலர் பெனாசீர் துவக்கி வைத்தார். கிளை நிர்வாகி முகமது காசிம் தலைமை வகித்தார். சிறுவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கோம்பைத் தோட்டம், காயிதேமில்லத் நகர், பெரிய கடை வீதி ஆகிய பகுதிகள் வழியாக இந்த ஊர்வலம் நடந்தது. மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.