மேலும் செய்திகள்
மரங்களை சேதப்படுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர்
19-Jul-2025
பல்லடம்; பல்லடம் அருகே, எண்ணற்ற நிழல் தரும் மரங்கள், தாறுமாறாக வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. பல்லடம் அடுத்த, இச்சிப்பட்டி கிராமம், -அய்யன்கோவில் செல்லும் வழியில், புதிய மின்கம்பங்கள் பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, ரோட்டோரத்தில் இருந்த, 15க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்கள், இறைச்சிக் கூடங்களில் ஆடு மாடுகள் வெட்டுவது போல் தாறுமாறாக வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. மின்கம்பங்களுக்கு இடையூறு எனில் கிளைகளை மட்டுமே வெட்டி அகற்றலாம். ஆனால், இவ்வாறு, பசுமையான மரங்களை மொட்டையாக்கி, வேருடன் வீழ்த்துவது நியாயமா என, பசுமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இது மின்கம்பங்களை நடுவதற்காக நடந்த சம்பவமாக இல்லை. மாறாக, மரங்களை வெட்டி கடத்தும் நாடகமாகவே, பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
19-Jul-2025