உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

திருப்பூர்; ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு திருப்பூரில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.ஜம்மு - காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் உட்பட, 28 பேரை சுட்டு கொன்றனர். இந்த தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து பரிவார கூட்டமைப்பு சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று மாலை நடந்தது.இதில், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் பழனிசாமி, ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், சேவா பாரதி மாவட்ட தலைவர் விஜயகுமார், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பங்கேற்றவர்கள், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க என்று வலியுறுத்தினர்.----ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு,ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து பரிவார கூட்டமைப்பு சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர், ஏப். 24-ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு திருப்பூரில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.ஜம்மு - காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் உட்பட, 28 பேரை சுட்டு கொன்றனர். இந்த தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து பரிவார கூட்டமைப்பு சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று மாலை நடந்தது. இதில், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் பழனிசாமி, ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், சேவா பாரதி மாவட்ட தலைவர் விஜயகுமார், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பங்கேற்றவர்கள், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மோட்ச தீபம் ஏற்றிபா.ஜ.,வினர் அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு பா.ஜ.,வினர் மோட்ச தீபம் ஏற்றினர்.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு அவிநாசி நகர பா.ஜ. சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கோவை வடக்கு மாவட்ட தலைவர் கரு.மாரிமுத்து, நீலகிரி லோக்சபா இணை பொறுப்பாளர் கதிர்வேலன், அவிநாசி நகர தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அவிநாசி, வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிக்கவுண்டன்புதுார் பகுதியில் மேற்கு ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம் தலைமையில், பொதுச் செயலாளர் யுவராஜ் கண்ணன், பொருளாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திருமுருகன்பூண்டி பஸ் ஸ்டாப்பில் பூண்டிநகர தலைவர் சண்முகபாபு, இளைஞர் மேம்பாட்டுத்திறன் மாவட்ட தலைவர் டாக்டர் சுந்தரன், நகர பொருளாளர் மனோகரன், பொதுச் செயலாளர்சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை