உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருச்சி - பாலக்காடு ரயில் விஜயமங்கலம் வரையே! 

திருச்சி - பாலக்காடு ரயில் விஜயமங்கலம் வரையே! 

திருப்பூர்; பாலக்காடு ரயில் விஜயமங்கலம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, ஊத்துக்குளி ரயில்வே யார்டில் பராமரிப்பு, மின்பாதை சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால், திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்: 16843) நாளை (11 ம் தேதி) விஜயமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் மாலை 4:10 க்கு நிறுத்தப்படும். பணி முடிந்த பின், விஜயமங்கலத்திலிருந்து - பாலக்காடு டவுன் ஸ்டேஷனுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை