மேலும் செய்திகள்
கோழி - மீன் கழிவுடன் குடிநீர் சப்ளை
02-Nov-2024
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வடுகபாளையம் புதூர் கிராமத்தில், இன்று அதிகாலை, கேரள மாநில கழிவுகளை கொட்டிச் சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகள் மீண்டும் லாரியில் ஏற்றப்பட்டது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர். பொதுமக்கள் கூறுகையில், 'பழைய துணிமணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு சாமான்கள், சேர், சோபா உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கேரளாவில் இருந்து எடுத்து வந்து இங்கு கொட்டியுள்ளனர். தமிழகம் என்ன கழிவுகள் கொட்டும் இடமா? இதையே கேரளாவில் செய்திருந்தால் அங்குள்ளவர்கள் விட்டிருப்பார்களா? கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வரை எத்தனை சோதனை சாவடிகள் உள்ளன. இவற்றையெல்லாம் கடந்து கழிவுகளுடன் கேரள லாரி எவ்வாறு தமிழகம் வந்தது. எனவே, இந்த கழிவுகளை எங்கிருந்து எடுத்து வந்தார்களோ அங்கேயே கொண்டு செல்லட்டும். கழிவுகள் எடுத்த வந்த லாரியை சிறை பிடித்து வழக்கு பதிவு செய்வதுடன், லாரி உரிமையாளருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும், என்றனர். பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து, கழிவுகள் மீண்டும் அதே லாரியில் திருப்பி ஏற்றப்பட்டது. இது குறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். உரிய நடவடிக்கை எடுக்காமல் லாரியை எடுத்துச் செல்லக்கூடாது என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Nov-2024