லாரி மோதல்; ஒருவர் பலி
திருப்பூர்; காங்கயம், முல்லை நகரை சேர்ந்தவர் சத்யநாராயணன், 54. இவரது மனைவி ஈஸ்வரி, 48. தம்பதி டூவீலரில் காங்கயம் - கரூர் ரோட்டில் முத்துார் பிரிவு அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி, டூவீலர் மீது மோதியது. தம்பதி படுகாயமடைந்து, ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று மாலை சத்யநாராயணன் சிகிச்சை பலனின்றி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.