கட்டட தொழிலாளி வீட்டில் நகை திருடிய இருவர் கைது
பொங்கலுார்; கட்டட தொழிலாளியின் வீட்டில் நகை திருடிய இருவரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர்.பொங்கலுார் ஒன்றியம், வலையபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 56; கட்டட தொழிலாளி. இவர் கடந்த ஜூன், 30ல் வேலைக்கு சென்று இருந்த போது வீட்டில் இருந்த 4.5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அவர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.இந்நிலையில், போலீசார் காமநாயக்கன்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் மேலும் விசாரித்ததில், இருவரும் வலையபாளையத்தில் நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். விசாரணையில், பல்லடத்தைச் சேர்ந்த ராஜேஷ், 30 மற்றும் தெற்குபாளையத்தை சேர்ந்த சந்தோஷ், 35, என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 4.5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.