உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லாரி மீது வேன் மோதி இருவர் பலி; 2 பேர் காயம்

லாரி மீது வேன் மோதி இருவர் பலி; 2 பேர் காயம்

ஊத்துக்குளி; ஊத்துக்குளியில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் சுமை துாக்கும் தொழிலாளி இருவர் பரிதாபமாக இறந்தனர்.சேலத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 47; டிரைவர். அதே ஊரை சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளிகள் பாண்டியன், 38, ஜெயராமன், 45, செந்தில்குமார், 40. இவர்கள் ஜல்லி லோடு உடன் வேனில் கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.நள்ளிரவு, 2:00 மணியளவில் திருப்பூர் மாவட்டம், கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் செங்கப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, பெருமாநல்லுாரில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேப்பர் லோடு ஏற்றி சென்ற லாரி சர்வீஸ் ரோடு செல்வதற்காக 'ரிவர்சில்' செல்வதற்காக எவ்வித சமிக்ஞையும் இல்லாமல் வந்து கொண்டிருந்தது.இதனால், லாரி மீது வேன் மோதியது. இதில், சுமை துாக்கும் தொழிலாளி பாண்டியன், ஜெயராமன் பரிதாபமாக இறந்தனர். பெரியசாமி, செந்தில்குமார் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை