மேலும் செய்திகள்
ஏ.சி., மெக்கானிக் மீது வழக்கு
11-May-2025
பெண் துாக்கிட்டு தற்கொலை
16-Apr-2025
உடுமலை : உடுமலை அருகே, கால்வாயில் அடித்து செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்ற, தண்ணீரில் குதித்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.பொள்ளாச்சி அருகே மண்ணுார் கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன்; 36. இவர் தனது மனைவி கவுசல்யா, 32; தம்பி கார்த்திக்குமார், 34; அவரது மனைவி கனிமொழி மற்றும் குழந்தைகளுடன், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைக்கு சுற்றுலா வந்துள்ளார். சுற்றுலா முடித்து விட்டு திரும்பும் போது, திருமூர்த்திநகர் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயில் குடும்பத்தினர் குளிக்கச் சென்றுள்ளனர்.அப்போது, அக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு குழந்தை, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. குழந்தையை காப்பாற்ற கார்த்திக்குமார் கால்வாயில் குதித்துள்ளார். விவேகானந்தன், கவுசல்யா, கனிமொழி ஆகியோரும், பதட்டத்தில் கால்வாயில் குதித்து குழந்தையை மீட்க முயற்சித்துள்ளனர். அப்போது கால்வாய் அருகில் இருந்தவர்கள், கயிறு வீசி, குழந்தை, விவேகானந்தன், கனிமொழியை காப்பாற்றி விட்டனர். கார்த்திக்குமார், கவுசல்யா தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில், கால்வாய் ஓரத்தில், இருவரது உடலும் ஒதுங்கியது.தளி போலீசார் விசாரணை நடத்தினர். திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., பாசனத்துக்கு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த கால்வாயில் குளித்து சுற்றுலா பயணியர் உயிரிழக்கும் சம்பவங்கள், தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
11-May-2025
16-Apr-2025