உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறிவிப்பில்லாத பராமரிப்பு பணி; குடிநீர் வினியோகம் பாதிப்பு

அறிவிப்பில்லாத பராமரிப்பு பணி; குடிநீர் வினியோகம் பாதிப்பு

உடுமலை; உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட 38 ஊராட்சிகளில், திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு ஊராட்சியிலும், மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் எண்ணிக்கை அடிப்படையில், குடிநீர் வினியோகம் நடக்கிறது. கிராமப்பகுதிகளில், சுழற்சி முறையில் தான் வினியோகம் உள்ளது. அதன்படி சில ஊராட்சிகளில், பத்து நாட்கள் இடைவெளியில்தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஊராட்சிகளில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை உள்ளது. இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் அறிவிப்பில்லாத செயல்பாடுகளால், கிராம ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த சமயங்களில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.இந்த நடவடிக்கை குறித்து, ஊராட்சி நிர்வாகங்களுக்கு முன் அறிவிப்பு ஏதும் வழங்கப்படுதில்லை. இதனால் கிராமங்களில் திடீரென குடிநீர் நிறுத்தப்படுகிறது.தொடர்ந்து இதுபோல் பராமரிப்பு பணிகளால் வினியோகம் தடைபடுவதற்கு, பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தினர் மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர்.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து, பொதுமக்களுக்கு நேரடியான அறிவிப்பு வழங்க வேண்டும். செய்தித்தாள் வாயிலாக, மின்வாரியத்துறை போல பராமரிப்பு பணிகள் குறித்து தகவல் வெளியிட வேண்டும். ஊராட்சி நிர்வாகங்கள் அடிக்கடி குடிநீர் நிறுத்துவதாக, கிராம மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ