உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அலகுமலை ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டம்

அலகுமலை ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டம்

பொங்கலுார்; அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில், தைப்பொங்கலை முன்னிட்டு அலகு மலையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மலைப்பாளையம் தலைவர் தோட்டத்தில் நடந்தது.சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். இதில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் சத்யமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில துணைச் செயலாளர் அர்ஜுனன், துணைத் தலைவர் மூர்த்தி, துணை செயலாளர் செந்தில்குமார், பெருந்தொழுவு ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், அ.தி.மு.க., திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேசன், பொங்கலுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் கவுரிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை