உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்கலை தடகளம்; சாதித்தோருக்கு பாராட்டு

பல்கலை தடகளம்; சாதித்தோருக்கு பாராட்டு

திருப்பூர் : கோவை, நேரு விளையாட்டு அரங்கில், கடந்த 16 முதல், 18ம் தேதி வரை, பாரதியார் பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரி அணிகள், வீரர், வீராங்கனைகளுக்கான தடகள போட்டி நடந்தது. அவிநாசி அரசு கலைக்கல்லுாரி சார்பில் பங்கேற்ற மனோஜ் குமார் டெகத்லான் போட்டியில் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். இவர், திருப்பூர் ரைசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இவரை கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், பயிற்சியாளர் சுரேஷ்குமார் பாராட்டினர்.உடுமலை, ஜி.வி.ஜி., கல்லுாரி மாணவி, அஞ்சலி சில்வியா, 100 மீ., மற்றும், 200 மீ., இரண்டு ஓட்டங்களிலும் முதலிடம் பெற்று தங்கம் வென்று அசத்தினார். இக்கல்லுாரி மாணவி பவீனா, மும்முறை தத்தித் தாண்டுதல் போட்டியில், மூன்றாமிடம் பெற்று, வெண்கலம் வென்றார். பல்கலை அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, வீராங்கனைகளை கல்லுாரி நிர்வாகத்தினர், பயிற்சியாளர் திவ்யநாகேஸ்வரி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை