மாவட்ட தடகளப் போட்டியில் அசத்திய மாணவர்கள்! திருப்பூர் தெற்கு - அவிநாசி குறுமையம் முதலிடம்
திருப்பூர்; மாவட்ட தடகள போட்டியில், மாணவர் பிரிவில், 98 புள்ளிகளுடன் திருப்பூர் தெற்கு, மாணவியர் பிரிவில், 111 புள்ளிகளுடன் அவிநாசி குறுமையம் ஆகியன முதலிடம் பெற்றது.பள்ளி கல்வித்துறை, மாவட்ட விளையாட்டு பிரிவு இணைந்து, இரண்டு நாட்கள் மாவட்ட தடகள போட்டியை, அணைப் புதுார், டீ பப்ளிக் பள்ளியில் நடத்தியது. மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் இருந்து குறுமைய அளவில் முதலிடம் பெற்றவர்கள், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதலிடம் பெற்றோர், விரைவில் நடக்கவுள்ள மாநில தடகள போட்டியில், திருப்பூர் மாவட்டம் சார்பில் பங்கேற்க உள்ளனர். முதலிடம் பெற்றவர் விபரம் 14 வயது பிரிவு
நுாறு மீ., மற்றும், 200 மீ., ஓட்டத்தில், முகமதுபைசல் (எஸ்.கே.பி., பள்ளி, உடுமலை), 400 மீ., ஓட்டம், ஹரிஷ்; 600 மீ., ஓட்டம் ஆகாஷ், இருவரும் முருகு மெட்ரிக் பள்ளி, அண்ணா நகர். 80 மீ., தடைதாண்டும் ஓட்டம் மற்றும், நீளம் தாண்டுதலில் இளமுகிலன் (ஆக்ஸ்போர்டு மெட்ரிக், கொங்கல் நகரம்), உயரம் தாண்டுதல் செல்வஅனீஷ் (பிரன்ட்லைன் அகாடமி), குண்டு எறிதல் ராகவேந்திரன் (கதிரவன் மெட்ரிக், திருப்பூர்), வட்டு எறிதல் வினுபிரசாத் (அரசு மேல்நிலைப்பள்ளி, கோடங்கிபாளையம்). 400 மீ., தொடர் ஓட்டத்தில், தாராபுரம் பொன்னுமெட்ரிக் பள்ளி மாணவர்கள்முதலிடம். 17 வயது பிரிவு
நுாறு மீ., முகமதுசல்மான் (தி பிரன்ட்லைன் மெட்ரிக், திருப்பூர்), 200 மீ., ஓட்டத்தில், முகேஷ் (சசூரி பள்ளி, திருப்பூர்), 400 மீ., ஓட்டம் குருதீப் (பிளாட்டோஸ் அகாடமி), 800 மீ., ஓட்டம் கவின் (ஸ்ரீ ஹயக்கிரீவர் மெட்ரிக், அவிநாசி), 1500மீ., சந்தீப் (ஏ.பி.எஸ்., அகாடமி, நெருப்பெரிச்சல்) 3000 மீ., நவீன் (ஏ.வி.ஏ.டி., பள்ளி, சமாளாபுரம்), 110 மீ., தடை தாண்டும் ஓட்டம் ஜாய்ரத்தேஷ் (பிளாட்டோஸ் அகாடமி), நீளம் தாண்டுதல் முகேஷ் (சசூரி பள்ளி, திருப்பூர்).மும்முனை தாண்டுதல் கோகுல் (அரசு மேல்நிலைப்பள்ளி, குமரலிங்கம்), உயரம் தாண்டுதல் அஜய் ( அரசு உயர்நிலைப்பள்ளி, பூலுவப்பட்டி), குண்டுஎறிதல் சுதர்சன் (அரசு மேல்நிலைப்பள்ளி, கருவலுார்), வட்டுஎறிதல் லிங்கேஷ் (ஜேசீஸ் மெட்ரிக், காங்கயம்), ஈட்டிஎறிதல் பிகாஷ்தபா (ஏ.வி.ஏ.டி., சாமளாபுரம்), போல்ட்வால்ட் அஜய் (அரசு உயர்நிலைப்பள்ளி, பூலுவப்பட்டி). 400 மீ., மற்றும், 1,600 மீ., தொடர் ஓட்டம் இரண்டிலும், பிரண்ட்லைன் அகாடமி பள்ளி மாணவர்கள் முதலிடம். 19 வயது பிரிவு
நுாறு மீ., பாக்ய கோகுல் (ஜெய்சாரதா பள்ளி, திருப்பூர்), 200 மீ., ஓட்டத்தில், மணிகண்டா (அரசு மேல்நிலைப்பள்ளி, விஜயாபுரம்), 400 மீ., மற்றும், 800 மீ., ஓட்டம் இரண்டிலும் ஆதிஷ்வரன் முதலிடம் (ஏ.பி.எஸ்., அகாடமி, நெருப்பெரிச்சல்), 1,500 மீ., பிரவீன் (விவேகானந்தா வித்யாலயா, திருப்பூர்). 3,000 மீ., தளபதி (ஸ்ரீ ஹயக்கிரீவர் வித்யாலயா, அவிநாசி), 110 மீ., தடை தாண்டும் ஓட்டம் மணிகண்டா (அரசு மேல்நிலைப்பள்ளி, விஜயாபுரம்), 400 மீ., தடை தாண்டும் ஓட்டம் யுகேஷ் (அரசு மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம்).நீளம் தாண்டுதல் மற்றும் மும்முனை தாண்டுதல் இரண்டிலும் சண்முக பிரதீப் முதலிடம் (ஆர்.ஜி., மெட்ரிக், மானுர் பாளையம்), உயரம் தாண்டுதல் ஜிவேஷ் (ஜெய்ஸ்ரீராம் மெட்ரிக், அவிநாசிபாளையம்), குண்டுஎறிதல் மற்றும் வட்டு எறிதல் இரண்டிலும் ஆதித்யா முதலிடம் (பிரன்ட்லைன் அகாடமி), ஈட்டி எறிதல் விக்னேஸ்வரன் (ஏ.பி.எஸ்., அகடாமி, நெருப்பெரிச்சல்), போல்ட்வால்ட் சர்வந்த் (ஸ்ரீ ஆர்.ஆர்., மெட்ரிக், காங்கயம்). 400 மீ., மற்றும், 1,600 மீ., தொடர் ஓட்டம் இரண்டிலும், ஜெய்சாரதா மெட்ரிக், திருப்பூர். யார் சாம்பியன்?
மாணவர் பிரிவில், 98 புள்ளிகளுடன் திருப்பூர் தெற்கு, மாணவியர் பிரிவில், 111 புள்ளிகளுடன் அவிநாசி குறுமையம் முதலிடம் பெற்றது. தனிநபர் மாணவியர் பிரிவில் ைஷனி (ஜெய்வாய் பள்ளி) முதலிடம், மாணவர் பிரிவில் இளமுகிலன் (ஆக்ஸ்போர்டு மெட்ரிக், கொங்கல்நகரம்) முதலிடம் பெற்றனர்.